இயக்கத்தின் தலைவர் நெருங்கிய தோழர்களிடம் கூறிய வார்த்தைகள்! இறுதி போரின் முடிவை மாற்றிய ஒரு சம்பவம்
போர்க்களத்தை விட்டு நான் ஓடமாட்டேன், ஆயுதங்களை கீழே போடமாட்டேன், ஆனால் போர்க்களத்திலிருந்து வெளியேறி பொதுமக்களுடன் சேர விரும்புவோர் தங்கள் ஆயுதங்களை விட்டுவிட்டு செல்லலாம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவருடைய போராளிகளுக்கு கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈழப் போரின் இறுதி தருவாயில் நடந்த சம்பவங்ளை தொகுத்து BBC Hindi தொலைக்காட்சியில், BBC Hindi சேவையில் பணியாற்றும் ஊகவியலாளர் Rehan Fazal (ரெஹான் பஸால்) விவரண காணொளி ஒன்றை கடந்த 14 ஆம் திகதி வௌியிட்டுள்ளார்.
அனிதா பிரதாப் எழுதிய 'Island of Blood',பத்திரிகையாளர் எம்.ஆர்.நாராயண சுவாமியின் 'The Rout of Prabhakaran'ஆகிய நூல்களின் ஆதாரங்கள் மற்றும் இந்திய பாதுகாப்பு தரப்பினர் தனக்கு தெரிவித்த கருத்துக்களை கொண்டே தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசியத் தலைவரின் இறுதி காலத்தில் நடந்த சம்பவங்கள் என்ற விவரண தொகுப்பை Rehan Fazal (ரெஹான் பஸால்) வழங்கியுள்ளார்.
அந்த காணொளியிலே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,"மே 17 அன்று, தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரன் தனது நெருங்கிய தோழர்களிடம், போர்க்களத்தை விட்டு நான் ஓடமாட்டேன், ஆயுதங்களை கீழே போடமாட்டேன், ஆனால் வெளியேற விரும்பும் எவரும் செல்லலாம் என்றும், பொதுமக்களுடன் சேர விரும்புவோர் தங்கள் ஆயுதங்களை விட்டுவிட்டு அங்கு செல்லலாம் என்றும், எதிரிகளின் கைகளில் சிக்காமல் இருக்க விரும்புவோர் சயனைட் குப்பிகளை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 2008 இல், தமிழீழ விடுதலைப் புலிகளின் மிகவும் அனுபவம் வாய்ந்த இராணுவ தலைவரான பால்ராஜ் என்ற கந்தையா பாலசேகரம் மாரடைப்பால் இறந்தமை தலைவர் பிரபாகரனுக்கு பெரிய இழப்பு என கூறப்பட்டுள்ளது.
பால்ராஜுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மூன்று நாள் துக்க தினம் அனுஷ்டித்தனர். பால்ராஜ் இறக்காமல் இருந்திருந்தால் இலங்கை இராணுவத்துடனான தங்கள் போரின் விளைவு வேறுவிதமாக இருந்திருக்கும் என்று பல முன்னாள் போராளிகள் நம்புகின்றனர்.
இவ்வாறு நாட்டில் இடம்பெற்ற பல முக்கியமான அரசியல், சமூக, பொருளாதார செய்திகளை உள்ளடக்கிய லங்காசிறியின் விசேட செய்தி தொகுப்பு இதோ....



