தேசிய செல்வந்த சக்தியினர்.. கிண்டலடிக்கும் சாணக்கியன்!
தேசிய மக்கள் சக்தியினர் இன்று தேசிய செல்வந்த சக்தியினராக இருப்பதாக நாடாளுடன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(23.09.2025) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பெசிய அவர்,
“திருகோணமலை மாவட்ட தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் அருண் ஹேமச்சந்திரவுக்கு எதிராக நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் பிதேச சபை தலைவருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய ஏமாற்றும் சக்தியினர்
அத்துடன் மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் நிலையத்தில் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளருக்கு எதிராகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு மாதம் கடந்த நிலையில், எவ்வித விசாரணைகளும் செய்யவில்லை. தான் அமைப்பாளர் என்பதால் பொலிஸ் மா அதிபர் தன்னை விசாரணைக்கு அழைக்க மாட்டார் என்று சொல்லி திரிகிறார்.
இது தொடர்பில் விசாரணைகள் நடத்துமாறு பொது மக்கள் பாதுகாப்பு பிரதியமைச்சரிடம் கோருகிறேன். இந்த ஆவணங்களை நான் சபைக்கு முன்வைக்கிறேன். ஒரு வருடத்திற்கு முன்னர் இந்த அரசாங்கத்திற்கு தேசிய மக்கள் சக்தி என்றனர். பின்னர் தேசிய ஏமாற்றும் சக்தியினர் என்று அழைத்தனர்.
அரசியல் பேச்சுவார்த்தை மேடைகள்
ஆனால் ஒரு வருடத்திற்கு பின்னர் தேசிய செல்வந்த சக்தியினர் என்றே அழைக்கின்றனர். இவை நாட்டு மக்களுக்கு பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. சொத்து விபரங்களை பாரப்படுத்தல் 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தில் கொண்டுவரப்பட்டதாகும்.
அரசாங்கத்தின் சிலர் இன்று அச்சுறுத்தல் விடுக்கின்றனர். நாங்கள் பிள்ளையானுடன் அரசியல் செய்தவர்கள். இந்த அரசாங்கத்தில் கடந்த வருடம் செப்டம்பர் வரை மூவரின் முகங்களையே காட்டினார்கள். அது ஜனாதிபதி அநுர, பிரதமர் ஹரிணி மற்றும் அமைச்சர் விஜித ஆகியோராவர்.
அவர்கள் மாத்திரமே நாடாளுமன்றத்தில் இருந்தனர். இன்று அரசியல் பேச்சுவார்த்தை மேடைகளுக்கு வருவோர், அதாவது தேசிய பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக வந்து நாட்டை மாற்ற முயற்சிக்கின்றனர். இவர்கள் அன்று முகங்களை காட்டியிருந்தால் ஜனாதிபதி அநுர வெற்றி பெற்றிருக்க மாட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



