ஏமாற்று அரசியலுக்கு இனிமேல் இடமில்லை! அநுர அரசை சாடிய சஜித் அணி
பொய் வாக்குறுதிகளை வழங்கி நாட்டு மக்களைத் தொடர்ந்து ஏமாற்றலாம் என்று அநுர அரசு இனிமேலும் எண்ணக் கூடாது என ஐக்கிய மக்கள் சக்தி கடுமையாக எச்சரித்துள்ளது.
மக்கள் இன்று அரசின் உண்மை முகத்தை முழுமையாகப் புரிந்து கொண்டுள்ளனர் என்றும், ஏமாற்று அரசியலுக்கு இனி இடமில்லை என்றும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.
நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்
ஆட்சிக்கு வருவதற்கு முன் வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்படவில்லை என்றும், மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய அரசியல், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளுக்கு இந்த அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மக்களின் தீர்ப்பு
எதிர்வரும் தேர்தல்கள் மக்களின் தீர்ப்பை வெளிப்படுத்தும் முக்கியமான சந்தர்ப்பமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தத் தேர்தல்களில் மக்கள் இந்த அரசுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |