சீன ஹோட்டல் அறைகளில் தங்கும் ஜோடிகளுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்.. வெளியான அதிர்ச்சித் தகவல்
சீனாவிலுள்ள ஹோட்டல் அறைகளில் தங்கும் ஜோடிகளின் அந்தரங்கத் தருணங்கள், அவர்களுக்குத் தெரியாமலேயே ரகசிய கெமராக்கள் மூலம் படம் பிடிக்கப்பட்டு, ஆபாச இணையதளங்களில் நேரலையாக ஒளிபரப்பப்படும் அதிர்ச்சித் தகவல் புலனாய்வில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஹொங்கொங்கைச் சேர்ந்த நபர் ஒருவர், வழக்கமாக தான் பார்க்கும் ஒரு ஆபாச இணையதளத்தில் ஒரு காணொளியை கண்டு உறைந்து போனார்.
அதில் இருந்த ஜோடி தாமும் தமது காதலியும் என தெரியவந்துள்ளது. மூன்று வாரங்களுக்கு முன்பு ஷென்சென் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் அவர்கள் தங்கியிருந்தபோது, அங்கிருந்த மறைமுக கெமராக்கள் மூலம் அவர்களின் அந்தரங்கம் திருடப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் பார்க்கும் வகையில் பதிவேற்றப்பட்டிருந்தது.
கெமராவில் பதிவு
சீனாவில் தடை செய்யப்பட்டிருந்தாலும், சட்டவிரோத செயல்களுக்கு டெலிகிராம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. 'AKA' போன்ற முகவர்கள் மூலம் இந்த ரகசிய காணொளிகளை பார்க்க மாதாந்திரக் கட்டணமாக சுமார் 450 யுவான் வசூலிக்கப்படுகிறது.

ஹோட்டல் அறையில் விருந்தினர்கள் நுழைந்து மின்சார அட்டையை (Key Card) செருகியவுடன், கெமராக்கள் தானாகச் செயல்படத் தொடங்குகின்றன. இது இணையம் வழியாக வாடிக்கையாளர்களுக்கு நேரலையாகக் காட்டப்படுகிறது.
ஏசி வென்டிலேட்டர்கள், மின்சார சுவிட்ச் போர்டுகள் மற்றும் சிறிய ஓட்டைகளில் பென்சில் அழிப்பான் அளவிலான மிகச்சிறிய கெமராக்கள் பொருத்தப்படுகின்றன.
சீனாவின் செங்ஜோ (Zhengzhou) நகரில் உள்ள ஒரு ஹோட்டல் அறையை ஆய்வு செய்த சர்வதேச குழுவினர், அங்கு காற்றோட்ட வசதி உள்ள பகுதியில் கெமராக்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். அங்கிருந்த கெமராக்கள் கண்டறியும் கருவி கூட இதைக் காட்டிக் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குறித்த நபர் மற்றும் அவரது காதலி கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
காணொளியை பார்வையிட பணம்
"இப்போது பொது இடங்களுக்குச் சென்றால் யாராவது தங்களை அடையாளம் கண்டுவிடுவார்களோ என்ற பயத்தில் எப்போதும் தொப்பி அணிந்தே செல்கிறோம். ஹோட்டல்களில் தங்குவதையே நிறுத்திவிட்டோம்" என அவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

சீன அரசு கடந்த ஆண்டு ஹோட்டல் உரிமையாளர்கள் கெமராக்கள் குறித்து முறையாகப் பரிசோதிக்க வேண்டும் என புதிய விதிகளைக் கொண்டு வந்தது. இருப்பினும், இந்தச் சட்டவிரோத வர்த்தகம் இன்னும் பல கோடி ரூபாய் லாபத்தில் இயங்கி வருகிறது.
டெலிகிராம் நிறுவனம், இது குறித்து முறைப்பாடு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தன்னார்வ அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
ஹோட்டல் அறைகளில் நுழையும்போது விளக்குகளை அணைத்துவிட்டு, உங்கள் அலைபேசி
கெமரா மூலம் அறையில் ஏதேனும் சிவப்பு அல்லது வெள்ளை விளக்குகள் (Infrared)
தெரிகிறதா எனப் பரிசோதிப்பது ஓரளவிற்குப் பாதுகாப்பானது என நிபுணர்கள்
தெரிவிக்கின்றனர்.
திடீரென பற்றியெரிந்த ஈரான் தலைநகர் - அமெரிக்காவை அச்சுறுத்தும் ஈரானின் ஸ்லீப்பர் செல்ஸ் News Lankasri