அமெரிக்காவில் நடுவீதியில் நிறுத்தப்பட்ட பிரான்ஸ் ஜனாதிபதியின் வாகனம்! வெளியான காணொளி
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மேக்ரான் அமெரிக்காவின் நடுவீதியில் இறங்கி பயணித்த சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஐ.நா. போது சபை கூட்டம் நடைபெற்று வருகிறது.
நடுவீதியில் மேக்ரான்
இந்த சபையில் பிரான்ஸ் ஜனாதிபதி நீண்ட நேரம் உரையாற்றிய பின்னர், ஓய்வு எடுப்பதற்காக பிரான்ஸ் தூதரகம் நோக்கி சென்றுக்கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதாவது அமெரிக்காவில் தற்போது டொனால்டு ட்ரம்ப் கோன்வே பாஸ் வந்து கொண்டிருந்தது.
இதனால் பொலிஸார் உடனடியாக அனைத்து சாலைகளிலும் போக்குவரத்தை நிறுத்தியதால் இமானுவெல் மேக்ரானின் வாகனமும் நடுவீதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
சிறிது நேரம் காரில் அமர்ந்திருந்த மேக்ரான், பின்னர் காரில் இருந்து இறங்கி வந்து நேராக தடுப்பு கம்பி அருகே நின்று கொண்டிருந்து பொலிஸ் அதிகாரிடம், ஏன் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பினார்.
முத்தமிட்ட பொதுமகன்
அதற்கு அதிகாரி "மன்னிக்கவும் மிஸ்டர் பிரசிடென்ட் எல்லாமே தற்போது தடைசெய்யப்பட்டுள்ளது" என கூற மேக்ரான் சாலையில் நின்று கொண்டே, டொனால்டு ட்ரம்பிற்கு அழைப்பினை ஏற்படுத்தியுள்ளார்.
French President Macron phoned US President Trump after being stopped at a New York street blocked off for his US counterpart's motorcade during the United Nations General Assembly pic.twitter.com/dIk13aIu7I
— Reuters (@Reuters) September 23, 2025
நான் தெருவில் நின்று கொண்டிருக்கிறேன்.ஏனென்றால், எல்லாமே உங்களுக்கான தடைசெய்யப்பட்டுள்ளது என்று மேக்ரான் கூறியுள்ளார்.
எனினும், ட்ரம்ப் கோன்வே கடந்த சென்ற பிறகே, சாலைகள் திறந்து விடப்பட்டுள்ளது.
அமெரிக்க சாலை வழியாக நடந்து சென்றவர்கள், மேக்ரான் அருகில் பாதுகாப்பு அதிகாரிகள் நிற்பதை மகிழ்ச்சியாகவும், அதேவேளையில் ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனர்.
French President Macron’s motorcade was stopped in NYC for President Trump.
— Isaac Datura™ 🇺🇸 (@IsaacDatura) September 23, 2025
Macron called Trump and was told to walk as he started walking multiple blocks.
AMERICA FIRST 🇺🇸😂 pic.twitter.com/4Gg9YSgRAa
மேக்ரான் உடனடியாக காருக்கு செல்லவில்லை. ட்ரம்பிடம் தொலைப்பேசியில் பேசியவாறு சாலையில் நடந்து சென்றுள்ளார்.
பொதுமக்கள் அவரிடம் ஒரேயொரு செல்பி எனக் கட்டாயப்படுத்தியுள்ளனர்.
ஒருவர் அவருடைய நெற்றியில் முத்தமிட்டுள்ளனர், இந்த காணொளிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிர்ச்சியூட்டும் கணிப்புகள்! உலகின் அதிபதியாக உருவெடுக்க போகும் முக்கிய நபர்



