இலங்கை மக்களிடம் மாற்றம் ஏற்பட்டால் அரசாங்கத்திற்கு கிடைக்கும் நன்மை
தனியார் வாகனங்களில் பயணிக்கும் 10 சதவீதமானோர் பொது போக்குவரத்தினை பயன்படுத்தினால் 26 பில்லியன் ரூபாவை அரசாங்கத்தினால் சேமிக்க முடியும் என இலங்கை நிலையான வளசக்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
விசேடமாக மேல் மாகாணத்தில் மேலும் 10 வீதமான மக்களை பொதுப் போக்குவரத்தில் இணைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் 7 பில்லியன் ரூபாவை சேமிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுப் போக்குவரத்து அமைப்பில் உள்ள குறைபாடுகள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு சதவீத மக்கள் பொதுப் போக்குவரத்து சேவையை விட்டுவிட்டு சொந்தமாக வாகனங்களை வாங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்கு எந்த வசதியும் கிடைக்காததால் இன்று யாரும் பேருந்துகளில் செல்ல விரும்பவில்லை. தேங்காய் சிரட்டைகள் போல ஆட்களை சுமந்து செல்கிறார்கள். மக்கள் பாதுகாப்பு பற்றி சிந்திக்கவில்லை.
மேலும், வசதியாக செல்லக்கூடிய பேருந்துகள் இருந்தால், மக்கள் சொந்த வாகனங்களை அதிகம் விருப்ப மாட்டார்கள்.
நாட்டில் உள்ள பேருந்துகளைப் பார்க்கும் போது, அவற்றில் சில இருக்கைகள் உடைந்து, ஒழுங்கில்லாமல் இருக்கின்றன. இதன் காரணமாக அரச பேருந்துகளில் பயணிப்பதற்கான எண்ணம் மக்களுக்கு இல்லாமல் போகின்றதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.