பெரும்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் உயிரிழந்த மாணவியின் இறுதி ஊர்வலம்
நூற்றுகணக்கான மக்களின் மத்தியில் ஆலய கேணியில் உயிரிழந்த மாணவியின் இறுதி ஊர்வலம் நேற்றையதினம் இடம்பெற்றிருந்தது.
குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணிக்கு 01.06.2025 அன்று மூன்று மாணவிகள் சென்றுள்ளனர்.
கதறல் சத்தம்
அதில் இருவர் கேணிக்குள் புகைப்படம் எடுப்பதற்காக இறங்கிய வேளை இருவரும் கேணிக்குள் தவறி விழ்ந்துள்ளனர்.

அதனையடுத்து மற்றைய மாணவியின் கதறல் சத்தம் கேட்ட நிலையில் குமுழமுனை இளைஞர்களால் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
இறுதி அஞ்சலி
குறித்த சம்பவத்தில் உயிரிழந்த சற்சொரூபநாதன் றஸ்மிளா எனும் மாணவியின் இறுதி ஊர்வலம் நேற்றையதினம் பெரும்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்று கற்பூரபுல் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இவ் இறுதி ஊர்வலத்தில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டு இறுதி அஞ்சலியினை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.








கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri