உக்ரைனுக்கு அனுப்பப்படவுள்ள 6,000 வீரர்களின் உறைந்த உடல்கள்
கொல்லப்பட்ட 6,000 உக்ரைனிய வீரர்களின் உறைந்த உடல்களை உக்ரைனிடம் ஒப்படைக்க ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையில் துருக்கிய நகரமான இஸ்தான்புல்லில் இடம்பெற்ற இரண்டாவது சுற்று நேரடி அமைதிப் பேச்சுவார்த்தை, எந்தவொரு முன்னேற்றமும் இன்றி முடிவடைந்தது.
ஆனால், இரு தரப்பினரும் கைதிகளை பரிமாற்றம் செய்ய ஒப்புக்கொண்டனர்.
இதன்படி, அனைத்து நோய்வாய்ப்பட்ட மற்றும் பலத்த காயமடைந்த கைதிகளையும், 25 வயதுக்குட்பட்ட கைதிகளையும் பரிமாற்றிக்கொள்ள இரு தரப்பினரும் உடன்பட்டுள்ளனர்.
ட்ரோன் தாக்குதல்
இதற்கமைய, கொல்லப்படு சவக்கிடங்கில் பாதுகாக்கப்படும் 6,000 உக்ரைனிய வீரர்களின் உறைந்த உடல்களை முதற்கட்டமாக உக்ரைனுக்கு அனுப்ப ரஷ்யா தீர்மானித்துள்ளது.

அந்த 6,000 பேரும் அடையாளம் காணப்பட்டு அவர்களின் விபரங்கள் திரட்டப்பட்டுள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

கடந்த வாரம், ரஷ்ய எல்லைக்குள் ஊடுருவி மிகவும் வெற்றிகரமான ட்ரோன் தாக்குதலை உக்ரைன் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri