கரைக்கு கொண்டு வரப்பட மீன்பிடி இழுவைப் படகு! பெருமளவு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகம்
இலங்கையின் தெற்குக் கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி இழுவைப் படகொன்றை இலங்கை கடற்படையினர், கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
குறித்த படகு நேற்று (04.11.2026) கடற்படையினரின் விசேட நடவடிக்கையின்போது கைப்பற்றப்பட்டது.
படகில் இருந்து சுமார் 10 மூட்டைகளில் சந்தேகத்திற்கிடமான போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணை
அவற்றில் ஹெரோயின் மற்றும் கிரிஸ்டல் மெத்தாம்பெட்டமைன் (Ice) இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

இதனையடுத்து படகுடன் பணியாளர்கள் இன்று (நவம்பர் 05) மேலதிக விசாரணைகளுக்காக திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளும் சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.