கோட்டாபய அரசு வெளியேறியது மிகப் பெரும் தவறு! பேராபத்தாக மாறும் - முக்கிய செய்திகளின் தொகுப்பு
வீர வசனங்கள் பேசி சர்வதேச விசாரணைப் பொறிக்குள் இலங்கையைச் சிக்கவைக்க வேண்டாம் என்று அரசிடம் கேட்டுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். '
இலங்கை இராணுவம் படுகொலைகளில் ஈடுபடவில்லை. போர்க்குற்றங்களை இழைக்கவில்லை. இதை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் உரிய சாட்சியங்களுடன் இந்த முறை நிரூபிப்போம். நாம் எதற்கும் அஞ்சமாட்டோம்' என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்தன மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர ஆகியோர் அடுத்தடுத்துக் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,