அரசாங்கத்தின் முடிவின் ஆரம்பம் நாளை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நாளைய தினம் தனது பெரும்பான்மை பலத்தை இழக்கும் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில, அது அரசாங்கத்தின் முடிவின் ஆரம்பம் என கூறியுள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிள் காரணமாக மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக அரசாங்கம் அரசியல் ரீதியாக கடும் நெருக்கடியை எதிர்நோக்கி வருகிறது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கம் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டை முன்வைத்துள்ளது.
இந்த நிலையில் அவசரகால சட்டம் நிறைவேற்றுவது தொடர்பான வாக்கெடுப்பு நாளைய தினம் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளதுடன் பெரும்பாலும் அதற்கு எதிராகவே அதிகமான வாக்குகள் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The #SLPP Government will lose its majority in Parliament tomorrow marking its Beginning of the End.
— Udaya Gammanpila (@UPGammanpila) April 4, 2022
ආණ්ඩුවේ අවසානයේ ආරම්භය සනිටුහන් කරමින් හෙට දිනයේ දී පොහොට්ටු ආණ්ඩුවට සිය පාර්ලිමේන්තු බහුතරය අහිමි වනු ඇත.#EconomicCrisisLK #PoliticalCrisisLK