டெல்டா மாறுபாடுகளின் இறப்பு வீதம் தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
கோவிட் டெல்டா மாறுபாடு மிகவும் பரவக்கூடியது. எனினும் ஏனைய மாறுபாடுகளைக் காட்டிலும், அதிக இறப்புக்களை ஏற்படுத்தாது என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் தொற்று நோய்கள் தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் மரியா வான் கெர்கோவ் இதனை சிறிய காணொளி ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
இந்த மாறுபாட்டில் அடையாளம் காணப்பட்ட சில பிறழ்வுகள், வைரஸ் உயிரணுக்களை எளிதாக ஈர்த்துக்கொள்ள அனுமதிக்கின்றன.எனவே இது மக்களை எளிதில் பாதிக்கின்றது என்று வைத்தியர் மரியா வான் கெர்கோவ் குறிப்பிட்டுள்ளார்.
டெல்டா காரணமாக, இரண்டு நாடுகளின் தரவுகளை ஆய்வு செய்தபோது, மருத்துவமனையில் சேர்க்கும் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. எனினும் டெல்டா அதிக எண்ணிக்கையிலான இறப்பு விகிதத்தை கொண்டிருக்கவில்லை.
இருப்பினும், இந்த நாட்களில் வைரஸ் தொடர்ந்து மாறுகிறது என்றும், எனவே மாற்றங்கள் இன்னும் கடுமையானதாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
கோவிட் வைரஸ் மாற்றங்கள் தொடர்பிலேயே இப்போது கவலை எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது மீண்டும் "முடக்குதல்"என்று அர்த்தத்தை கொடுக்காது. ஏனெனில், தற்போதைய தடுப்பூசிகள் டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக சிறப்பாக செயல்படுகின்றன.
எனினும் மாறும் சூழ்நிலையை கருத்திற்கொண்டு மக்கள் முதலில் நோய்த்தொற்று பரவுதலைக் குறைப்பதே சிறந்த தீர்வாகும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தொற்று நோய்கள் தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் மரியா வான் கெர்கோவ் தெரிவித்துள்ளார்.

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan
