ஊரடங்கு உத்தரவின் நீடிப்பு தொடர்பில் அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கம் வெளியிட்டுள்ள தகவல்
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் உரிய வகையில் கடைப்பிடிக்காவிடின் ஊரடங்கு உத்தரவை நீடிக்க வேண்டி ஏற்படும் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்ட அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடக பேச்சாளர் வைத்தியர் சமந்த ஆனந்த இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவை முறையாக செயற்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
இதற்கு மாறாக மீறி செயற்பட்டால் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை நீடிக்க வேண்டி ஏற்படும்.
இல்லை என்றால் மீண்டும் ஒரு மாதத்தில் நாட்டை முடக்க வேண்டி ஏற்படும். அப்படியாயின் திறப்பதும் மூடுவதுமாக இருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.





மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
