பலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் ஜனாதிபதி தமிழ் தேசிய இனத்தை மறந்தது ஏன்..!
பலஸ்தீனம் என்ற நாடு இஸ்ரேலுடன் வடக்கு, மேற்கு மற்றும் தெற்கிலும், கிழக்கில் ஜோர்தானுடனும், தென்மேற்கில் எகிப்துடனும் தனது எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது.
பலஸ்தீனம் என்கின்ற பெயர் அவ்வப்போது அவ்விடத்திற்கு சூட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்திருந்தாலும் பலஸ்தீனம் என்ற ஒரு நாடு பற்றிய வரலாறு 2500 வருடங்களுக்கு மேல் இல்லை.
கடும் நெருக்கடி
அது நாடாக இல்லாது இஸ்ரேல், ஜோர்டான் ஆகியவற்றின் ஆளுகையின் இருந்த பிரதேசமாகவும், பிரித்தானியாவின் ஆளுகையின் கீழ் இருந்த பிரதேசமாகவும் விளங்கியிருந்தது.
பலஸ்தீன மக்கள் அருகில் இருந்த அரபு நாடுகளினாலும் அதிகம் பாதிக்கப்பட்டும் இருந்தனர். போரால் பலஸ்தீனம் கடும் நெருக்கடிகளை சந்தித்து இருந்தது.
ஐ.நா பொதுச் சபையின் 80 ஆவது கூட்டத் தொடரில் ஒரு இறையாண்மை கொண்ட தனி நாடாக பலஸ்தீனம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
81 சதவீத ஐ.நா உறுப்பு நாடுகளால் இம்முடிவு எட்டப் பட்டுள்ளது. தற்போது ஐ.நாவில் அங்கத்துவம் வகிக்கும் 193 ஐ.நா. உறுப்பு நாடுகளில் 157 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா பொதுச் சபையில் இதன்மூலம் 194 நாடுகள் அங்கீகாரம் பெற்றுள்ளன. இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவும் பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு ஆதரவை வழங்கியுள்ளார்.
ஐ.நா பொதுச் சபை
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஐ.நா பொதுச் சபையின் 80 ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, பலஸ்தீன மக்களுக்கான தனி அரசுக்கான பிரிக்க முடியாத உரிமையை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.
இஸ்ரேலிய மற்றும் பலஸ்தீன மக்களின் நியாயமான பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான தேவைகளை அங்கீகரிப்பதும் அவசியம். 1967 ஆம் ஆண்டின் எல்லை வரையறையை கொண்டு, இரண்டு நாடுகள் அருகருகே இருப்பதற்கான அடிப்படையை வழங்கிய ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களின் படி ஒரு நியாயமான மற்றும் நீடித்த தீர்வுக்காக நாம் ஒன்றுபட வேண்டும் எனத் தெரிவித்தார்.
இலங்கைத் தீவைப் பொறுத்த வரை பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து சுதந்திரம் பெற்ற நாள் முதல் தமிழ் தேசிய இனம் தமக்கு சம உரிமையை கோரி 30 வருடமாக அகிம்சை வழியில் போராடியது.
அதனை தென்னிலங்கையில் மாறி மாறிறி ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளாததுடன் தமிழ் மக்கள் மீது இன வன்முறையை கட்டவிழ்தது விட்டனர். இதன்விளைவாக தமிழ் தேசிய இனத்தின் இருப்பையும், அவர்களது தேசத்தையும் பாதுகாக்க தமிழ் இளைஞர், யுவதிகள் ஆயுதமேந்திப் போராட வேண்டிய நிர்ப்பந்த நிலை ஏற்பட்டிருந்தது.
ஷஅந்த 30 வருட ஆயுதப் போராட்டம் 2009 ஆம் ஆண்டு மௌனிக்கப்பட்ட பின்னர் மீண்டும் 16 வருடங்களாக நீதி கேட்டும், சமவுரிமை கேட்டும் தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியாக போராடி வருகின்றனர்.
ஆக, தனது நாட்டிற்குள் சிங்கள தேசிய இனத்தைப் போல் இன்னொரு இனமான தமிழ் தேசிய இனமும் சுதந்திரமாக வாழ்வதற்காக 76 வருடத்திற்கு மேலாக சொல்லண்ணா, துன்ப துயரங்களுடன் போராடி வருகின்றது.
அதறகாக தமிழ் தேசிய இனம் கொடுதத விலைகள் அதிகம். நாட்டில் ஏற்பட்ட பாதிப்புக்கள் அதிகம். பலஸ்தீன மக்களின் துயரத்தை புரிந்து கொண்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சொந்த நாட்டில் நீதிக்காக ஏங்கும் மக்களின் போராட்டத்தையும், அவர்களது வலியையும் புரிந்து கொள்ளாமை கடந்த ஆட்சியாளர்களின் மனநிலையில் தான் தேசிய மக்கள் சக்தியும் இருக்கின்றதா என்ற கேள்வியை எழுப்புகிறது.
மறுபுறம் பலஸ்தீனம் மீது கருணை காட்டும் ஐ.நா தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகைளையும், அவர்கள நீதிக் கோரிக்கைகளையும் நீதியான முறையில் அணுகி தீர்வைப் பெற்றுக் கொடுக்க தவறியுள்ளது.
அநுர குமார திஸாநாயக்க
மேலும் ஐ.நாவில் உலகில் எந்த நாடும் போரை விரும்பவில்லை. போர் அல்லது மோதல், அது எங்கு, எப்படி நடந்தாலும், அது ஒரு சோகம் என்பதை நாங்கள் அறிவோம்.
இப்போதும் கூட அந்த சோகத்தின் வலி உலகின் பல பகுதிகளிலும் உணரப்படுகிறது. மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக போரின் கசப்பான அனுபவத்தை அனுபவித்த ஒரு நாடாக, அதன் அழிவை நாங்கள் நன்கு அறிவோம்.
போரில் இறந்த ஆயிரக்கணக்கான மக்களின் நினைவுச் சின்னங்களுக்கு முன், அவர்களின் பெற்றோர், குழந்தைகள் மற்றும் மனைவிகள் எழுப்பிய வேதனையான வேண்டுகோள்களைப் பார்க்கும் எவரும், போரைக் கனவு காணக்கூட மாட்டார்கள் எனவும் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க காஸா பகுதியில் இடம்பெற்ற மனித பேரவலம் குறித்தும் அது துயரமான திறந்தவெளி சிறைசசாலையாக உள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளார்.
காஸாவை விஞ்சியதாக முள்ளிவாய்காலில் இடம்பெற்ற பேரவலம் ஏன் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கண்ணுக்கு புலப்படவில்லை. சர்வதேச ரீதியில் தம்மை நல்லவர்களாக காட்ட முயலும அரசாங்கம் சொந்த நாட்டு மக்களின் அரசியல அபிலாசைகளை வழங்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
அதுவே இலங்கையின் நிலையான அபிவிருத்திக்கும், நிலையான ஒற்றுமைக்கும் வழிவகுத்து ஒருமித்த தேசமாக எழுச்சி பெற வழிவகுக்கும்.





நொருங்கிய கார்.. நிச்சயதார்த்தம் முடிந்த மூன்றே நாளில் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா Cineulagam

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan
