தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் நம்பகத்தன்மை குறித்து அமீஷா விக்ரமதுங்க கேள்வி
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மறைந்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் புதல்வி அமீஷா விக்ரமதுங்கவினால் இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
கொலைக்குற்றச்சாட்டு குறித்த விசாரணைகளை திரிபுபடுத்திய பொலிஸ் உத்தியோகத்தருக்கே விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
பக்கச்சார்பாக செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட பிரசன்ன அல்விஸ் என்ற அதிகாரியே இந்த விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே முறைப்பாடு செய்யப்பட்ட நபர் ஒருவருக்கு விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டிருப்பது ஆச்சரியமளிப்பதாக தாம் இலங்கை அதிகாரிகளுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
கொலைக்குற்ற விசாரணைகளை திரிபுபடுத்திய நபரிடம் விசாரணை ஒப்படைக்கப்பட்டுள்ளமை ஆச்சரியமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அரசியல் சாசனத்திற்கு அமைவாக மக்களுக்கு சேவையாற்றும் நிறுவனமாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு செயற்பட வேண்டுமென அவர் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
உரிய நியமனங்களை பின்பற்றாது மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் மூலம் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் நம்பகத்தன்மைக்கு பெரும் குந்தகம் நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.