டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 368 ரூபா 50 சதமாக பதிவாகியுள்ளது.
அதன்படி, டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 357 ரூபா 46 சதமாக பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாய் சற்று ஏற்ற இறக்கம் கண்டுள்ளது.
யூரோவொன்றின் பெறுமதி
மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்களின்படி, யூரோ ஒன்றின் விற்பனைப் பெறுமதி 377 ரூபா 63 சதமாகவும், யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 363 ரூபா 19 சதமாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட்
மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்களின்படி, பவுண்ட் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 443 ரூபா 26 சதமாகவும், பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 426 ரூபா 32 சதமாகவும் பதிவாகியுள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan
