நாட்டிற்கு கொண்டுவரப்படும் பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட இலங்கையரின் சடலம்
பாகிஸ்தானில் பணி புரிந்த நிலையில் கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்தவின் சடலம் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில் நாளை (திங்கட்கிழமை) குறித்த சடலம் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது.
உயிரிழந்தவரின் சடலத்தை நாட்டிற்கு கொண்டுவருவது உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கான செலவை ஏற்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாகிஸ்தானுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் சியால்கோட்டில் உள்ள வசிராபாத் வீதியில் அமைந்துள்ள, தனியார் தொழிற்சாலை ஒன்றில் மேலாளராக பணிபுரியும் இலங்கை பிரஜையான பிரியந்த தியவதன ஏனைய ஊழியர்களினால் சித்திரவதைக்கு உள்ளாகி எரியூட்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்....
பாகிஸ்தானில் கொல்லப்பட்ட இலங்கையரை காப்பாற்ற முயன்ற நண்பருக்கு வழங்கப்படவுள்ள கௌரவம்
பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்! குற்றவாளிகளுக்கு அந்நாட்டு நீதிமன்றம் கொடுத்துள்ள உத்தரவு





ஆட்டத்திற்கு என்ட் கார்ட் போட்ட மக்கள்.. இந்த வாரம் வெளியேறும் சின்னத்திரை பிரபலம் யார் தெரியுமா? Manithan

ரூ.400 கோடி மதிப்புள்ள நிறுவனத்திற்கு சொந்தக்காரர்.., தற்போது தேர்தலில் போட்டியிட விருப்பம் News Lankasri

கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri
