பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்! சந்தேகநபர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் கொடுத்துள்ள உத்தரவு
பாகிஸ்தானில் கொடூரமாக கொல்லப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
13 சந்தேக நபர்களுக்கு இவ்வாறு சியல்கொட் நீதிமன்றினால் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நாளை(06) குஜரன்வாலாவில் உள்ள பங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பாகிஸ்தானில் பணி புரிந்து வந்த நிலையில் சக ஊழியர்களால் இலங்கையைச் சேர்ந்த குமார தியவடன அடித்து கொலை செய்யப்பட்டிருந்தார்.
இதேவேளை, குறித்த சம்பவத்திற்கு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்ததுடன், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைப் பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
