டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வரலாறு காணாத வீழ்ச்சியை பதிவு செய்தது
வரலாற்றில் முதல் தடவையாக அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 321 ரூபா 49 சதம் வரை அதிகரித்துள்ளது.
அத்துடன், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 310 ரூபா 88 சதமாக பதிவாகியுள்ளது.
மேலும், ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 407 ரூபா 08 சதமாகவும், விற்பனை பெறுமதி 421 ரூபா 89 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 340 ரூபா 83 சதம் விற்பனை பெறுமதி 352 ரூபா 42 சதமாகவும், சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 332 ரூபா 87 சதம் விற்பனை பெறுமதி 346 ரூபா 20 சதமாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 246 ரூபா 80 சதம் விற்பனை பெறுமதி 257 ரூபா 29 சதமாகவும்,
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231 ரூபா 59 சதம். விற்பனை பெறுமதி 242 ரூபா 38 சதமாகவும்,
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 51 சதம் விற்பனை பெறுமதி 2 ரூபா 61 சதமாகவும் பதிவாகியுள்ளது.
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri
ஜேர்மனியை பிரித்தானியா முதலான நாடுகளுடன் இணைக்கும் புதிய எரிவாயுக்குழாய் திட்டம் துவக்கம் News Lankasri
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri