சர்வாதிகாரி சுமந்திரனை தோற்கடிக்கவே போட்டியிட்டேன்! கே.வி.தவராசா பகிரங்கம்
தமிழ் மக்களுடைய பிரதான கட்சியாக இருந்த தமிழரசுக்கட்சி 2029ஆம் ஆண்டிற்கு பிறகு சிதறடிக்கப்பட்டுவிட்டது என்று சனநாயக தமிழரசு கட்சியின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பை நடத்திய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனும் தமிழரசுக் கட்சி சார்பில் தெரிவுசெய்யப்படவில்லையென்றால் யாழ் மாவட்டத்திலிருந்து யாரும் தமிழரசுகட்சி சார்பில் மக்கள் பிரதிநிதியாக தெரிவுசெய்திருக்க பட்டிருக்கமாட்டார்கள்.
இன்று அரசியலை வாழ்வாதாரமாகவும் முதலீடாகவும் எடுத்து விட்டார்கள். ஒருவரை தோற்கடிக்கவே நான் தேர்தலில் போட்டியிட்டேன்.எதற்காக போட்டியிட்டேனோ அது வெற்றியளித்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.





வீடே வெறிச்சோடி இருக்கு: எந்த பெரிய நடிகரும் வரவில்லை? நடிகர் மதன் பாப்க்கு இப்படி ஒரு நிலையா? Manithan

அடுத்த பேரழிவு தரும் நிலநடுக்கம் இந்த நாட்டைத் தாக்கக்கூடும்... எச்சரிக்கும் விஞ்ஞானிகள் News Lankasri
