முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா(Mervyn Silva) மற்றும்குறித்த வழக்கு தொடர்பான மூன்று பிரதிவாதிகளை ஏப்ரல் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை மஹர நீதவான் நீதிமன்றம் இன்றையதினம்(8) பிறப்பித்துள்ளது.
பிடியாணை பிறப்பிப்பு
கிரிபத்கொடையில் உள்ள அரசுக்குச் சொந்தமான காணி ஒன்றை போலி ஆவணங்களை தயாரித்து தனியார் ஒருவருக்கு விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் மார்ச் 05 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் துறையினரால் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்படுவதைத் தவிர்த்து வந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் மில்ரோய் பெரேரா ஆகியோரைக் கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

மலைபோல் குவிந்துள்ள சொத்தில் 1 சதவீதம் மட்டுமே பிள்ளைகளுக்கு... பில்கேட்ஸ் கூறும் காரணம் News Lankasri

ஜேர்மனி போன்று உக்ரைனும் இரண்டாகப் பிளக்கப்பட வேண்டும்... ட்ரம்பின் சிறப்பு தூதுவர் புதிய திட்டம் News Lankasri
