பூமிக்குத் திரும்பவுள்ள சுனிதாவுக்கு புதிய சிக்கல்
ஜூன் 2024 முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விண்வெளியில் சிக்கித் தவிக்கும் நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர், மார்ச் 19 ஆம் திகதிக்குள் ஸ்பேஸ்எக்ஸின் ட்ராகன் விண்கலம் மூலம் பூமிக்குத் திரும்பத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆனால் விண்வெளியில் அதிக நாட்கள் தங்கியிருப்பதால் அவர்கள் சம்பாதிக்கக்கூடிய தொகை இது என்பது பேசுபொருளாக மாறியுள்ளது.
பல அறிக்கைகளின்படி, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் GS-15 மத்திய அரசு ஊழியர்கள். எனவே அவர்களின் ஆண்டு சம்பளம் 125,133 முதல் 162,672 டொலர்கள் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஓய்வுபெற்ற நாசா விண்வெளி வீரர் கேடி கோல்மனின் கூற்றுப்படி, வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோர் இதுவரை ஒன்பது மாதங்களுக்கும் மேலாக விண்வெளியில் தங்கியிருப்பதற்காக எந்த சிறப்பு கூடுதல் நேர சம்பளமும் வழங்கப்படாமல் போகலாம் என கூறியுள்ளார்.
அமெரிக்க விண்வெளி வீராங்கனை
சர்வதேச விண்வெளி மையத்துக்கு கடந்த ஆண்டு ஜூன் 5ஆம் திகதி இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் பூமிக்கு திரும்பவுள்ளனர்.
போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் குறித்த இருவரும் சர்வதேச விண்வெளி மையத்துக்கு கடந்த ஆண்டு சென்றிருந்தனர்.
பால்கன்-9 ட்ராகன் விண்கலம் மூலம் அவர்கள் பூமிக்கு திரும்பவுள்ளனர்.
போயிங் நிறுவனத்தினால் கடந்த ஆண்டு ஏவப்பட்ட விண்கலம் மூலம், 10 நாட்கள் ஆய்வுக்கு பிறகு பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டு இருந்த நிலையில் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு பூமிக்கு திரும்ப முடியவில்லை.
இதையடுத்து இருவரையும் மீட்டு கொண்டு வர ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று அதிகாலை பால்கன்-9 ட்ராகன் விண்கலம் ஏவப்பட்டது.
இதில் அமெரிக்க விண்வெளி வீரர்கள் ஆனி மெக்கிளைன், நிக்கோலி அயர்ஸ், ஜப்பான் விண்வெளி வீரர் டகுயா ஒனிஸி, ரஷ்ய விண்வெளி வீரர் கிரிஸ் பெஸ்கோவ் ஆகியோர் சென்றுள்ளனர்.
சர்வதேச விண்வெளி நிலையம்
இந்த விண்கலம் இன்று காலை சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்ததாக நாசா அறிவித்துள்ளது.
அதில் இருந்து விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் சென்றனர். அவர்களை அங்கிருக்கும் வீரர்கள் வரவேற்றுள்ளனர்.
எதிர்வரும், 19ஆம் திகதி சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து ட்ராகன் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், நிக் ஹேக் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த அலெக்சாண்டர் ஆகியோர் பூமிக்கு திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்வெளியில் சிக்கி தவித்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் 9 மாதங்களுக்கு பிறகு பூமிக்கு திரும்ப உள்ளனர்.
அதேவேளையில் வானிலை இடையூறு ஏதாவது ஏற்பட்டால் அவர்கள் பூமிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |