தாய்லாந்து பெண்ணால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட 70 மில்லியன் பெறுமதியான போதைப்பொருள்
இலங்கைக்கு சுற்றுலா பயணியாக வருகை தந்துள்ள தாய்லாந்து பெண் ஒருவர் 70 மில்லியனுக்கும் அதிகம் பெறுமதியான குஷ் போதைப்பொருட்களை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
சிகிரியாவிற்கு சென்றுள்ள குறித்த தாய்லாந்து பெண், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 70 மில்லியனு ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள குஷ் போதைப்பொருட்களை இன்று (13) மதியம் சிகிரியா பொலிஸாரிடம் கையளித்துள்ளார்.
இந்தப் பெண் உட்பட 17 பேர் கொண்ட தாய்லாந்து சுற்றுலாப் பயணிகள் குழு 12 நாள் சுற்றுப்பயணமாக நேற்று (12) நாட்டிற்கு வந்துள்ளனர்.
சுற்றுலா பயணி
இந்நிலையில், விமான நிலையத்திலிருந்து பேருந்தில் சிகிரியாவில் உள்ள ஒரு விடுதிக்கு சென்று, அவர்களின் பொருட்களை சோதித்த போது, தாய்லாந்து பெண்களில் ஒருவரின் பொருள் பை மாற்றப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து, அவர் குறித்த பையை திறந்துள்ள நிலையில் உள்ளே போதைப்பெருள் இருந்துள்ளமை தெரிய வந்துள்ளது. இதன் பின்னர், அந்த பெண், சுற்றுலா நிறுவன வழிகாட்டியுடன் சிகிரியா பொலிஸாரிடம் அந்த போதைப்பொருள் கையிருப்பை ஒப்படைத்துள்ளார்.
அந்தப் பையில் ஒவ்வொன்றும் 600 கிராம் எடையுள்ள போதைப்பொருள் அடங்கிய 23 பொலித்தீன் பக்கெற்றுக்கள் இருந்துள்ளன. வரலாற்றில் தம்புள்ளை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கைப்பற்றப்பட்ட குஷ் போதைப்பொருட்களின் மிகப்பெரிய அளவு இது என்று பொலிஸார் கூறுகின்றனர்.
இந்த சுற்றுலாப் பயணிகள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் நாட்டிற்கு வந்துள்ள போதிலும் இவ்வளவு பெரிய அளவிலான போதைப்பொருளை எவ்வாறு சோதனைக்குட்படுத்தப்படாமல் விமான நிலையத்தை விட்டு வெளியேற முடிந்தது என்பது ஒரு பெரும் கேள்வி எழுவதாக சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் குறித்து தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் முறையிட திட்டமிடப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




Post Office -ன் 2 வருட சூப்பர் திட்டம்.., ரூ.2 லட்சம் முதலீட்டுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri

வீட்டிலும், சிறகடிக்க ஆசை சீரியல் படப்பிடிப்பிலும் வெற்றி வசந்த் பிறந்தநாள் கொண்டாட்டம்... வீடியோ இதோ Cineulagam
