றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு புதிய தலைவர் தெரிவு
இந்த ஆண்டின் ஐ.பி.எல் தொடருக்கான றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவராக ரஜத் படிதர் (Rajat Patidar) நியமிக்கப்பட்டுள்ளார்.
கிரிக்கெட் இயக்குநர் மோ போபட் மற்றும் தலைமை பயிற்சியாளர் என்டி ப்ளவர் ( Andy Flower) ஆகியோர் இன்று (14) உத்தியோக பூர்வமாக இதனை அறிவித்துள்ளனர்.
15 போட்டிகளில் விளையாடி 5 அரைச்சதங்கள்
2022 முதல் 2024 வரை அணியின் தலைவராக செயற்பட்ட தென்னாப்பிரிக்க வீரர் ஃபாஃப் டு பிளெசிஸை பெங்களூரு அணி கடந்த ஐ.பி.எல். ஏலத்தில் தக்கவைக்கத் தவறியது.
இதனால், முன்னாள் தலைவர் விராட் கோலி மீண்டும் அணியை வழிநடத்துவார் என்ற பரவலான ஊகங்களுக்கு மத்தியில் இந்த நியமனம் வந்துள்ளது.
2021 முதல் றோயல் செலஞ்சர்ஸ் உடன் இருக்கும் படிதார், ஐபிஎல் வரலாற்றில் பெங்களூரு அணியின் 8 ஆவது தலைவராவார்.
31 வயதான படிதார் 2024 சீசனில் பெங்களூர் அணிக்காக 15 போட்டிகளில் விளையாடி 5 அரைசதங்கள் அடங்கலாக 395 ஓட்டங்களை எடுத்துள்ளார்.
இந்நிலையில், ஐ.பி.எல் தொடர் எதிர்வரும் மார்ச் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)
தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 4 நாட்கள் முன்
![புதுத்தொழில் தொடங்கிய முத்து.. வயிற்றெரிச்சலில் விஜயா செய்த காரியம்! சிறகடிக்க ஆசை ப்ரோமோ](https://cdn.ibcstack.com/article/f581024d-b018-48eb-acc5-84414573be7c/25-67acb61f83461-sm.webp)
புதுத்தொழில் தொடங்கிய முத்து.. வயிற்றெரிச்சலில் விஜயா செய்த காரியம்! சிறகடிக்க ஆசை ப்ரோமோ Cineulagam
![Neeya Naana: கொன்றுவேன்... கோபிநாத் முன்பு தங்கையை கண்டித்த அக்கா! அரங்கத்தில் நடந்தது என்ன?](https://cdn.ibcstack.com/article/19c68b2f-82ec-486a-8131-35e0c9613544/25-67aca8f5b7054-sm.webp)