ஐசிசி போட்டிக்கான இந்திய அணியின் தெரிவில் பின்னடைவு
2025 ஐசிசி (ICC) செம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நீக்கப்பட்டுள்ளார்.
முதுகில் ஏற்கனவே ஏற்பட்டுள்ள உபாதை இன்னும் குணமாகாத நிலையிலேயே அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், இந்திய தேர்வுக் குழு ஹர்ஷித் ராணாவை பும்ராவுக்குப் பதிலாக பெயரிட்டுள்ளது.
தற்காலிக அணி
இந்திய அணி வருண் சக்கரவர்த்தியையும் அணியில் சேர்த்துள்ளது. ஆரம்பத்தில் தற்காலிக அணியில் இடம்பெற்றிருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்குப் பதிலாக அவர் சேர்க்கப்பட்டுள்ளார்

இதன்படி, 2025 ஐசிசி செம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளுக்கான இந்திய அணியில், ரோஹித் சர்மா (தலைவர்), சுப்மான் கில் (துணை தலைவர்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் காப்பாளர் ), ரிஷப் பந்த் (விக்கெட் காப்பாளர்), ஹார்டிக் பாண்டியா, அக்சர் படேல், வொஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது சிராஜ் மற்றும் சிவம் துபே ஆகிய மூன்று வீரர்களும் எப்போது வேண்டுமானாலும் போட்டிகளுக்காக துபாய்க்கு பயணம் செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri