பேரழிவு பகுதியாக அறிவிக்கப்பட்டது தாய்லாந்து தலைநகர் பேங்கொக்
தாய்லாந்துத் தலைநகர் பேங்கொக்கில் பெய்துவரும் கனமழை காரணமாக நகர் முழுவதும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து, பேங்கொக் நகரை பேரழிவுப் பகுதியாக அந்நகர ஆளுநர் சசாட் சித்தீபுன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
கடந்த 48 மணிநேரத்தில் நகரில் சுமார் 300 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
பலத்த இடியுடன் கூடிய மழை
இதனால் பிரதான வீதிகள் யாவும் நீரில் மூழ்கியுள்ளதோடு, பல இடங்களில் இடுப்பளவுக்கு மேல் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ள நிலவரத்தைக் கருத்திற்கொண்டு, பாடசாலைகள் தற்காலிக முகாம்களாக மாற்றப்பட்டுள்ளதுடன், இராணுவத்தினர் களமிறக்கப்பட்டு நிவாரண மற்றும் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், கால்வாய்களுக்கு அருகில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான மேடான பகுதிகளுக்கு உடனடியாக மாறுமாறு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பேங்கொக்கின் பிரதான விமான நிலையமான சொவர்ணபூமி வழமையான சேவைகளில் ஈடுபட்டுள்ள போதிலும், பயணிகள் பயண நேரத்திற்கு இரண்டு முதல் மூன்று மணித்தியாலங்களுக்கு முன்னதாகவே வருகை தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வார இறுதி நாட்களில் மேலும் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்நாட்டு வானிலை அவதானிப்பகம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழீழத்தை அங்கீகரிக்கத் தயாராக இருந்த நாடு! முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வெளியிட்டிருக்கும் கருத்து..
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri