புலம்பெயர் மக்கள் விவகாரத்தில் அநுரவின் திட்டம் கேள்விக்குறியே.. எழுந்துள்ள குற்றச்சாட்டு
ஆயுதப் போர் முடிவுக்கு வந்து பதினேழு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், ஈழத்தமிழர்களின் தனித்துவமான தேசிய அடையாளத்தை வலுவிழக்கச் செய்து இலங்கை தேசிய அடையாளத்திற்குள் உள்வாங்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்.
மாவீரர் நாளை முன்னிட்டு இன்று (27) அவர் வெளியிட்டுள்ள விசேட உரையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ள 'Global Sri Lankan Heritage Citizen' என்ற புதிய இரட்டைக் குடியுரிமைத் திட்டம், புலம்பெயர் தமிழர்களை இலங்கையின் அடையாளத்திற்குள் உள்வாங்கும் நோக்கத்தைக் கொண்டதா என்பது குறித்து எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதி நடைபெறவுள்ள தமது நாடாளுமன்ற அமர்வில் ஆராய்ந்து உத்தியோகபூர்வ நிலைப்பாடு வெளியிடப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
அரச கட்டமைப்பு
அத்துடன், கொழும்பில் உருவாகும் எந்தவொரு ஆட்சியாளரிடமிருந்தும் தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை அநுர குமார திஸாநாயக்கவின் ஆட்சிக்காலம் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளதாகவும், எமது பிரச்சினை தனிநபர்களுடனானது அல்லாது அரச கட்டமைப்புடனானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச சட்டத்துறையில் காம்பியா எதிர் மியான்மார் வழக்கின் தீர்ப்பு, அரசினால் நடாத்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் பாலியல் துன்புறுத்தல்களை நிரூபிப்பதற்கான வலுவான சட்டப் பரிமாணங்களை ஈழத்தமிழர்களுக்கு வழங்கியுள்ளதாகவும், ஐ.நா.வின் OSLAP பொறிமுறைக்குத் தொடர்ச்சியாக ஆதாரங்களை வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள தலைமைத்துவச் சர்ச்சைக்காக இலங்கை நீதிமன்றத்தை நாடியமைக்குத் தனது வருத்தத்தையும் கண்டனத்தையும் பதிவு செய்த அவர், உள்ளக முரண்பாடுகளைத் தீர்க்க சுயாதீன சமரசப் பொறிமுறைகளை உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இறுதியாக, போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம், மருத்துவம் மற்றும் உளநல மறுவாழ்விற்காக அடுத்த மாவீரர் நாளுக்கு முன்னர் மூன்று கட்டங்களாக நிரந்தர மனிதாபிமான நலன்புரி நிதியக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான செயற்றிட்டத்தையும் விசுவநாதன் ருத்ரகுமாரன் முன்மொழிந்துள்ளார்.
இந்து சமுத்திரம் இனி சீனாவின் கையிலா! 23 மணி நேரம் முன்
Tamizha Tamizha: முன்னாள் காதலியை நினைத்து கணவர் செய்யும் செயல்! தரமான பதிலடி கொடுத்த மனைவி Manithan