எம்மை மிரட்டி அடிபணிய வைக்க முடியாது! பகிரங்க சவால் விடுத்துள்ள அநுர
வேலைநிறுத்தப் போராட்டங்கள் எவ்வளவு நடத்தப்பட்டாலும் நியாயமற்ற கோரிக்கைகளுக்கு தீர்வுகளை வழங்க முடியாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டமும் உழைக்கும் மக்களும் என்ற தொனிப்பொருளில் கொழும்பு கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
வழங்கக் கூடிய அளவிற்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. கோரிக்கை விடுக்கும் அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆர்ப்பாட்டங்கள் செய்யத் தேவையில்லை
சமகால அரசாங்கத்திடம் இன்னும் கொஞ்சம் சத்தமாக கத்தினால் பெற்றுக்கொள்ள முடியும் எனச் சிலர் நினைக்கிறார்கள்.

இந்த அரசாங்கத்திடம் ஒருபோதும் சத்தம்போட்டு ஒன்றையும் பெற்றுக்கொள்ள முடியாது. சத்தம்போட்டாலும் கொடுக்கப் போவதில்லை.
நாம் சத்தம் போடுவதற்கு முன்பே கொடுப்போம். எமக்குப் பிரச்சினைகள் தெரியும். நாம் அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்போம்.
அதற்காக எமக்கு எதிராக யாரும் வீதிக்கு கோஷம் போட வேண்டிய அவசியமில்லை. வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் செய்யத் தேவையில்லை.
கோஷங்களை எழுப்பினாலும் தீர்வு வழங்க முடியாதவற்றிற்கு தீர்வு வழங்க முடியாது. இதுதான் தற்போதைய நிலவரம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.