அநுராதபுரத்தில் யானை வேட்டையின் பயங்கர சம்பவங்கள் அம்பலம்
அநுராதபுரத்தில் உள்ள திறப்பனே வனவிலங்கு சரணாலயத்தின் எல்லைக்கு வெளியே உள்ள ஒரு பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஏராளமான வேட்டை உபகரணங்கள் மற்றும் பாரிய வெடிமருந்துகளை திறப்பனே வனவிலங்கு அதிகாரிகள் குழு மீட்டுள்ளது.
சமீபத்திய வரலாற்றில் ஒரே நாளில் கைப்பற்றப்பட்ட மிகப் பெரிய வேட்டை உபகரணங்கள் இதுவாகும் என தெரிவிக்கப்படுகிறது.
பாரிய யானை வேட்டைகள்
வனவிலங்கு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் (11.02.2026) அதிகாலை திறப்பனே, உட்டிமடுவவில் உள்ள பல்லாங்குளம் குளத்தைச் சுற்றியுள்ள பகுதியில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக சூட்சுமமாக வைக்கப்பட்டிருந்த 21 வேட்டை உபகரணங்கள் மற்றும் 120 வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீப காலமாக இந்தப் பகுதியில் காயமடைந்த காட்டு யானைகள் உட்பட காட்டு விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருந்தன.

இந்த வேட்டை உபகரணங்கள் குறித்த சம்பவங்களுக்கு நேரடி தொடர்பை ஏற்படுத்துவதாக வனவிலங்கு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் பொருட்களும் நாளை (12.02.2026) அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளன.
திறப்பனே வனவிலங்கு பிரிவின் அதிகாரிகள் அந்தப் பகுதி முழுவதும் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam