ஹட்டன் நகரில் தற்காலிக கடைகளை அகற்ற முயன்றபோது பதற்றநிலை
ஹட்டன் - டிக்கோயா நகர சபைத் தலைவர் அசோக கருணாரத்னவின் பணிப்புரையின் பேரில், ஹட்டன் - டிக்கோயா நகர சபை எல்லைக்குட்பட்ட சந்தை வளாகத்தில் நிரந்தர வர்த்தக நிலையங்களின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த அனுமதியற்ற தற்காலிக கடைகளை அகற்றுவதற்காக நகர சபை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டபோது இன்று(21) காலை பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நகர சபை ஊழியர்கள், வருவாய் பரிசோதகர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பான நிலை காணப்பட்டுள்ளது.
கட்டுவான தீ விபத்தில் 5 பேர் பலி..! பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட தொழிலாளர்கள்: தீயை கட்டுப்படுத்த கடும் பிரயத்தனம்
தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கை
இந்த பதற்றநிலைக்கு முக்கிய காரணமாக, சந்தை வளாகத்தில் இதுபோன்ற அனுமதியற்ற தற்காலிக கடைகள் பல இருந்தபோதிலும், அவற்றில் ஐந்து கடைகளை மட்டும் குறிவைத்து அதிகாரிகள் அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கடை உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டியதே என தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, நகர சபை அதிகாரிகள் தனிநபர்களைத் தெரிவுசெய்தும் பக்கச்சார்பாகவும் அரசியல் அல்லது தரப்புவாத அடிப்படையிலும் இந்த அகற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக வர்த்தகர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, ஹட்டன் - டிக்கோயா நகர சபையின் உப தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமையை பார்வையிட்டனர்.
பின்னர் அங்கிருந்த அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கிய அவர்கள், எந்தவித பாகுபாடும் இன்றி அனைத்து வர்த்தகர்களுக்கும் சமமாகவும் நியாயமான முறையிலும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதனிடையே, சம்பவ இடத்திற்கு வந்திருந்த ஹட்டன் - டிக்கோயா நகர சபையின் வருவாய் பரிசோதகர் ஜி.ஜி.யூ.பி. கமகே உள்ளிட்ட அதிகாரிகள், இது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும் என்று தெரிவித்துள்ளனர்.
கொடூர தாக்குதலின் பின்னணியில் முக்கிய சூத்திரதாரியான ராஜபக்ச குடும்பத்தினர்..! அம்பலமாகும் சதித்திட்டம்






