யாழ். எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட பதற்ற நிலை விரைந்த பொலிஸார்
யாழ். எரிபொருள் நிலையம் ஒன்றில் எரிபொருள் நிரப்புவதற்காக நின்ற சாரதிகளுக்கும் எரிபொருள் நிரப்பு நிலைய நிர்வாகத்தினருக்கும் இடையே முரண்பாடு இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவமானது இன்று(05) யாழ்ப்பாணம் வடமராட்சி மந்திகை பகுதியில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பருத்தித்துறை பொலிஸார் எரிபொருள் நிரப்புவதற்கு வந்தவர்களுடனும், எரிபொருள் நிரப்பு நிலைய நிர்வாகத்தினருடனும் உரையாடி நிலமையை அமைதி நிலைக்கு கொண்டுவந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சிறிய கொள்கலன்களில் டீசல் நிரப்பபடுவதனால் வாகனங்களுடன் காத்திருந்த சாரதிகள் எரிபொருள் நிரப்பு நிலைய நிர்வாகிகள் உடன் முரண்பட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பருத்தித்துரை பொலிஸார் இருதரப்புடனும் சமரசம் பேசி எரிபொருள் கொள்கலன்களில் நிரப்புவதை நிறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் எரிபொருள் இல்லை எனக்கூறி மந்திகை எரிபொருள் நிரப்பு நிலைய நிர்வாகம் டீசல் விநியோகிப்பதை நிறுத்தியுள்ளது.
இதனைத்தொடர்ந்து நேற்று பிற்பகலில் இருந்து இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட
வாகனங்கள் டீசல் வரும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.






