வரி விதிப்பு ஊடாக தொடர்ச்சியாக தாக்கும் டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்காவால், இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த வரி விதிப்பு, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருவதாக அவர் குறிப்பட்டுள்ளார்.
அதன்படி, இறக்குமதி செய்யப்படும் அனைத்து உரிமம் பெற்ற மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
அத்துடன், மருந்து நிறுவனங்கள் தங்களது உற்பத்திக் கூடங்களை அமெரிக்காவில் நிறுவ வேண்டும் எனவும், அது கட்டுமானத்தில் இருந்தால், அவர்களுக்கு இந்த வரி விதிப்பில் விலக்கு அளிக்கப்படும் எனவும் டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அதிரடி அறிவிப்பு, இந்திய மருந்து ஏற்றுமதி வணிகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் சமையலறை மற்றும் குளியலறை பொருட்களுக்கு 50 சதவீத வரியும், தளபாடங்களுக்கு 30 சதவீத வரியும் விதிக்கப்படும் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின், தேசிய பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு உற்பத்தி செயல்முறையை கருத்திற்கொண்டு இந்த வரி விதிப்பை அறிவிப்பதாக தனது, ட்ரூத் சமூகத்தள பதிவில் டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், ட்ரம்ப்பின் இந்த புதிய அறிவிப்பு அமெரிக்காவில் பணவீக்கம் மற்றும் பொருளாதார ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று, வணிக துறை வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
இவ்வாறு நாட்டில் இடம்பெற்ற பல முக்கியமான அரசியல், சமூக, பொருளாதார செய்திகளை உள்ளடக்கிய லங்காசிறியின் விசேட செய்தி தொகுப்பு இதோ....





அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
