நாடாளுமன்றத்தில் பைத்தியம் என திட்டுவாங்கிய அர்ச்சுனா! சபையில் சலசலப்பு
வெளியில் சென்ற கொள்கலன் தொடர்பில் நான் குறிப்பிட்ட கருத்துக்களால் என்னை பைத்தியக்காரன் என்று சொன்னார்கள்.ஆனால் நான் கேட்டுக் கொண்டிருந்தேன் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (26.09.2025) உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
யாரையும் பைத்தியம் என்று கூற முடியாது
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,''என்னை பைத்தியக்காரன் என்று சொன்னதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.
நான் ஒரு வைத்தியர் என்பதால் அது தொடர்பில் சத்தியம் எடுத்துக் கொண்டுள்ளதால் எனக்கு யாரையும் பைத்தியம் என்று கூற முடியாது.அப்படி கூறினால் நோயை கண்டறிதலாகும். ஆதலால் அவ்வாறு கூற முடியாது.
அரசாங்கத்திலுள்ள 159 பேருக்கும் மூலதர்மங்கள் தெரியாது என்றாலும் வைத்தியர் என்ற வகையில் எனக்கு மூலதர்மங்கள் இருக்கிறது.
இலங்கை, LGBTQ நண்பர்களுக்கு பாதுகாப்பான இடமாக, இலங்கை சுற்றுலா சபையால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
LGBTQ நண்பர்களே
நிகழ்காலத்தில் நாடாளுமன்ற முன்வரிசை ஆசனங்களில் பல நிகழ்வுகளை பார்த்துக் கொள்ளலாம்.
எங்கள் நாட்டின் தலைவர்கள் அமெரிக்காவில் LGBTQ தொடர்பில் பேசுகிறார்.
இப்போது வாங்க வாங்க LGBTQ நண்பர்களே என சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வோம் என்கின்றனர்.
அதுமட்டுமல்ல அரசாங்கத்தரப்பில் யாராவது எழும்பி முடிந்தால் தேசிய தலைவர் பயங்கரவாதி என்று கூறுங்கள் என்று சவால் விடுத்த அர்ச்சுனா எம்.பி, உங்களால் முடியாது. அதேபோல இலங்கை இராணுவ வீரர்களை 'செபலியோ' அல்ல 'ரனவிரு' என்று கூற அவர்களால் முடியாது.'' எனவும் கூறியுள்ளார்.
பிமல் ரத்நாயக்கவின் கருத்து
இதேவேளை இன்றையதினம், அமைச்சர் பிமல் ரத்நாயக்க,நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பதிலளிப்பேனே தவிர பைத்தியக்காரன்களுக்கு பதிலளிக்க மாட்டேன் என அர்ச்சுனா எம்.பியை சுட்டிக்காட்டி கூறினார்.
தனது கேள்விகளுக்கு ஒரு பதிலும் சரியாக வழங்கவில்லையென கத்தி மேசையை தட்டியவாறு அச்சுனா எம்.பி அமர்ந்த பின்னர், பிமல் ரத்நாயக்க உரையாற்ற ஆரம்பித்தார்.
இதன்போது, சுஜீவ சேனசிங்க கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.



