தென்னக்கோன் நாளை விசாரணைக்கு அழைப்பு
பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், பதவியின் அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவில் நாளை(19) முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பதவி துஷ்பிரயோகம் குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குழுவின் முதற்கட்ட விசாரணை
இதன்பிரகாரம் நாளை பிற்பகல் 2 மணிக்கு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு தேசபந்து தென்னக்கோனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குழுவின் முதற்கட்ட விசாரணைப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு பரிசீலனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.
பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தனது பதவி அதிகாரங்களைப் பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து, அறிக்கையிடுவதற்காகக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri
