அவதானமாக செயற்படவும்! இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
நாட்டில் எதிர்வரும் நாட்களில் வெப்பநிலை 43 பாகை செல்சியஸை விட அதிகமாக இருக்கும் என்பதால் வெப்ப வாதம் ஏற்படும் ஆபத்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார்.
இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கவுள்ள சூரியன்
எதிர்வரும் 02 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை சூரியன் இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கவுள்ளது.

ஆண்டு தோறும் ஏப்ரல் மாதத்தின் முற்பகுதியில் இலங்கையின் பல பகுதிகளுக்கும் சூரியனின் அமைவு கிட்டத்தட்ட 90 பாகையில் அமையும் என்பதனால் இலங்கை முழுவதும் அதிக வெப்பநிலை நிலவும்.
இதன் காரணமாக நாளுக்கான சராசரி வெப்பநிலை 38- 42 பாகை செல்சியஸ் ஆக நிலவும். பகல் பொழுதில் அளவிடப்படும் நாளின் அதிகூடிய வெப்பநிலை 43 பாகை செல்சியஸ் இனை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்
பொதுவாக மனித உடல் 40 பாகை செல்சியஸ் இனை விட அதிக வெப்பநிலையை தாங்காது. பலருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வெப்பநிலையாகும்.

40 பாகை செல்சியஸ் என்பது வெப்ப வாதத்தை ஏற்படுத்தும் வெப்பநிலையாகும். ஆனால் மக்கள் மிக அவதானமாக இருப்பது அவசியம்.இந்த அதிக வெப்பநிலை வெப்ப உணர்திறன் உள்ளவர்களுக்கு ஆபத்தினை ஏற்படுத்தக்கூடும்.
குறிப்பாக முதியவர்கள், சிறுவர்கள் மற்றும் விசேட தேவையுடையவர்களும் அதிக வெப்ப நிலையினால் அதிக நீரிழப்பு உள்ளவர்களும் இந்த அதிக வெப்பநிலையினால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 20 மணி நேரம் முன்
Tamizha Tamizha: காதலித்த கணவருக்கு கண்முன் நடந்த இரண்டாவது திருமணம்! 14 ஆண்டுகளாக குறையாத காதல் Manithan