இலங்கையிலிருந்து சிறப்பு விமானத்தில் நூற்றுக்கணக்கானோர் நாடு கடத்தல்
நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 125 சீன நாட்டினர் இன்று காலை சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
சுற்றுலா விசாக்களில் நாட்டிற்கு வருகைதந்து இணையவழியில் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 125 சீன நாட்டினர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
வெலிசர தடுப்பு மையத்தில் தடுத்துவைப்பு
அவர்களில் 6 பேர் சீன பெண்கள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புலனாய்வுப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினரால் நேற்று அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன் பின்னர், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமைக் கட்டுப்பாட்டாளரின் உத்தரவின் பேரில், அவர்கள் நாட்டிலிருந்து நாடு கடத்தப்படும் வரை வெலிசர தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.
சிறப்பு விமானத்தில் நாடு கடத்தல்
இலங்கையில் உள்ள சீனத்தூதரகம் மூலம் இது குறித்து நாட்டுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அந்த குழுவினரை அழைத்துச்செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு ஒரு சிறப்பு விமானம் அனுப்பப்பட்டது.

அதே விமானத்தில், அந்நாட்டை சேர்ந்த மருத்துவர்கள் குழுவும், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
50 ஆண்டுகளின் பின் சனி ஜெயந்தியில் உருவாகும் ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஜனனி செய்த காரியம், குணசேகரன் மீது வருத்தத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
புதிய சீரியலில் ஒன்றாக நடிக்கப்போகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகர்கள்... யார் தெரியுமா? Cineulagam