ஓட்டமாவடியில் கோவிட்டால் ஆசிரியர் ஒருவர் மரணம்
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் நேற்று வியாழக்கிழமை கோவிட்டால் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இன்று வெள்ளிக்கிழமை 03 அன்டிஜன் பரிசோதனை மற்றும் 52 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் ஓட்டமாவடி பிரதேசத்தில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன் வழிகாட்டலில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புடைய நபர்கள் 03 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், எவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்படவில்லை மேலும் கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புடைய நபர்கள் ஐம்பத்து இரண்டு (52) பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெற்றுள்ளன.
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் நேற்று வியாழக்கிழமை கோவிட்டால் 57 வயதுடைய காவத்தமுனை அல் அமீன் வித்தியாலய ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுள்ளார்.
குறித்த பரிசோதனையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.நௌபர், பொதுச்
சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர்
கலந்து கொண்டுள்ளனர்.




ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri