மகிந்தவின் மனைவி தொடர்பில் பதிவான பில்லியன் கணக்கான பண ஊழல் குற்றச்சாட்டு!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச ஊழல் மோசடியுடன் தொடர்புபட்டுள்ளார் என்று கூறி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு சிவில் செயற்பாட்டாளர் ஒருவர் முறைப்பாடு அளித்துள்ளார்.
அத்தோடு, ஷிரந்தி ராஜபக்சவுடன் இணைந்து முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவும் பில்லியன் கணக்கான பணத்தை மோசடி செய்துள்ளனர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
எனவே இந்த சம்பவம் தொடர்பில் உடனடியான விசாரணைகளை ஆரம்பியுங்கள் எனவும் சிவில் செயற்பாட்டாளர் தனது கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இதேவேளை, குறித்த சிவில் செயற்பாட்டாளர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்வைத்த முறைப்பாட்டை அடுத்து தான் கெஹெலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டார்.
எனவே, ஷிரந்தி ராஜபக்ச தொடர்பில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam