கே.பியை சந்தித்தாரா சுரேஷ் சலே..! அம்பலமாகும் பெரும் இரகசியம்
தற்போது சுரேஷ் சலே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த காலங்களில் மூடிமறைக்கப்பட்ட பல அதிர்ச்சி தரும் இரகசியங்கள் மீண்டும் அம்பலத்திற்கு வரத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், சுரேஷ் சலே கே.பி என்றழைக்கப்பட்ட குமரன் பத்மநாதனை சந்தித்தாரா என கேள்வி எழுப்பும் வகையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேசப் பொறுப்பாளராகவும், ஆயுதக் கொள்வனவாளராகவும் இருந்தவர் தான் கே.பி.
2009 போரின் முடிவுக்குப் பின்னர் மலேசியாவில் வைத்து இலங்கை உளவுத்துறையினரால் சர்வதேசக் கூட்டுடன் கைது செய்யப்பட்டு இலங்கைற்குக் கொண்டுவரப்பட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் கீழ், அவர் மீதான பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் ஓரங்கட்டப்பட்டு, அவர் கிளிநொச்சியில் அரச பாதுகாப்போடு ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்தும் அளவுக்குச் சலுகைகள் வழங்கப்பட்டன.
இதற்கிடையில், சுரேஷ் சலே கே.பியை சந்தித்தாரா என்ற கேள்வி உட்பட பல்வேறு தகவல்களை ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri