ரங்கவின் மரணம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்சவின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தாமதமின்றி மேற்கொண்டு நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவரது மரணம் தொடர்பான வழக்கு இன்றைய தினம்(12.6.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு உத்தரவு
இதற்கமைய, மரண பரிசோதனை தொடர்பான தீர்ப்பு அறிவிப்பு எதிர்வரும் ஜூலை 31 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

திறைசேரியினால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம், சைபர் குற்றவாளிகளிடத்தில் சென்ற சம்பவம் தொடர்பாக குற்றச்சாட்டுக்குள்ளாகி பணிநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், ரங்க ராஜபக்ச சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan