கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி: ஆசிரியர் பற்றாக்குறை குறித்து அரசாங்கத்திடம் கோரிக்கை
நாட்டில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை குறித்து அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு கல்வி வலயத்துக்குட்பட்ட முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி, வற்றாப்பளை மகாவித்தியாலயம், தண்ணீரூற்று முஸ்லிம் மகாவித்தியாலயம், புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி உள்ளிட்ட பாடசாலைகளுக்கு ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது கருத்து தெரிவித்த ஜோசப் ஸ்டாலின், "தற்போது வரவு - செலவுத் திட்டத்தில் விசேடமாக முப்பதாயிரம் அரச ஊழியர்களை பணியில் இனைத்துக் கொள்வதாகவும் அதற்காக பத்தாயிரம் மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்குவதாகவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கூறியுள்ளார்.
ஆனாலும் முல்லைத்தீவில் உள்ள தேசிய பாடசாலையான வித்தியானந்தா கல்லூரியை எடுத்துக்கொண்டால் அங்கு 91 ஆசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 63 ஆசிரியர்கள் தான் இருக்கிறார்கள். இவ்வாறு இருக்கையில் ஆசிரியர் சேவையில் மாத்திரம் முப்பதாயிரம் வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
மேலும், ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பாது மாணவர்களுக்கு எவ்வாறு கற்ப்பித்தல் செயற்பாடுகளை செய்வது? இதனால் நாங்கள் கேட்கிறோம் ஆசிரியர்கள் சம்பந்தமான நிலைப்பாட்டை அரசாங்கம் கூற வேண்டும். உரிய ஆசிரியர்கள் நியமிக்கப்படாமையால் இந்த கஸ்டப் பிரதேசங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் இடமாற்றம் கூட செல்ல முடியாது உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஜெலென்ஸ்கியை நாட்டை விட்டே துரத்த ட்ரம்ப் திட்டம்: போர் வெற்றியை அறிவிக்கவிருக்கும் ரஷ்யா News Lankasri
