மன்னாரிலும் ஆசிரியர்களால் போராட்டம் முன்னெடுப்பு
நாடு முழுவதும் இன்றைய தினம் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மன்னார் மாவட்டத்திலும் கவனயீர்ப்பு போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மன்னார் வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாகவும், ஆண்டங்குளத்தில் அமைந்துள்ள மடு கல்வி வலயத்திற்கு முன்பாகவும் இன்று காலை 10 மணியளவில் குறித்த போராட்டம் இடம்பெற்றிருந்தது.
குறித்த போராட்டமானது ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்கக் கோரியும், ஆசிரியர் - அதிபர் சம்பள பிரச்சினைகளுக்கு 87 நாட்கள் அரசாங்கம் தீர்வு வழங்காமையை சுட்டிக்காட்டியும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மன்னார் மற்றும் மடு கல்வி வலயத்தில் உள்ள அனைத்து ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்களும் இணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இலவச கல்விக்கு 6 வீதம் நிதி ஒதுக்கு, இலவச கல்வியை தனியார் மயப்படுத்தாதே, ஆசிரியர் தொழில் கௌரவத்தை உதாசீனப்படுத்தாதே, ஐந்தாயிரம் ரூபாய்க்கு அடிபணிய மாட்டோம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.







ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 22 மணி நேரம் முன்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
