முழுமையான நிராயுதபாணியாக ஹமாஸ்.. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நெதன்யாகுவின் உரை!
ஹமாஸ் முழுமையாக நிராயுதபாணியாக்கப்படும் வரை இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தாது என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், போரை முடிவுக்கு கொண்டுவர ஹமாஸிற்கு காலக்கெடு விதித்துள்ள நிலையில், பெஞ்சமின் நெதன்யாகுவின் இந்த உரை வெளியாகியுள்ளது.
காசாவில் உள்ள அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளும் வரும் நாட்களில் திரும்பி வருவார்கள் என அவர் இதன்போது நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தைகள்
அத்துடன், நெருக்கடியின் போது, இராணுவ உதவி மற்றும் அரசியல் ஆதரவுடன் இஸ்ரேலை ஆதரித்தமைக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், பணயக்கைதிகள் விடுதலையின் இறுதி தொழில்நுட்ப விவரங்களில் பணியாற்ற இஸ்ரேலின் பேச்சுவார்த்தை குழு எகிப்துக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, பணயக்கைதிகள் அனைவரும் பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்வதற்காக மத்தியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தைகள் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |