அமெரிக்காவின் தடையால் வடக்கில் வாழ்வாதாரத்தை இழக்கவுள்ள பல்லாயிரம் குடும்பங்கள்!
நீலக்கால் நீந்தும் நண்டின் இறக்குமதியை அமெரிக்கா தடை செய்வதால் வடக்கில் 5 தொழிற்சாலைகள் மூடப்படும் துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்படுவதாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா சுட்டிக்காட்டி உள்ளார்.
இன்றையதினம்(4) யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று கடற்றொழிலாளர்களுடைய வாழ்வாதாரத்தை நீலக்கால் நீந்தும் நண்டுகள் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன.
அமெரிக்காவின் தடை
இந்த நண்டுகளின் பிரதான ஏற்றுமதி சந்தையாக அமெரிக்கா காணப்படுகின்றது. அமெரிக்காவானது இந்த நீலக்கால் நீந்தும் நண்டின் இறக்குமதியை எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து நிறுத்துவதாக அறிவித்திருக்கின்றது.
வடமாகாணத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள் இந்த நன்கு பதினிடும் கம்பெனியால் தமது வாழ்வாதாரத்தை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
அதைவிட 6000க்கு மேற்பட்ட கடற்றொழில் குடும்பங்கள் வடக்கு மாகாணத்தில் இந்த நண்டு தொழிலை பிரதான தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை அரசாங்கம்
வடக்கின் மிகப்பெரிய ஏற்றுமதி பொருளாதாரமாக இந்த நண்டு காணப்படுகின்றது. இந்த பதப்படுத்தப்பட்ட நண்டு சதையானது பிரதான ஏற்றுமதியாக அமெரிக்காவுக்கே சந்தைப்படுத்தப்படுகிறது.
அமெரிக்க அரசாங்கமானது இதற்கு தடை விதிப்பதற்கான காரணம் இலங்கை அரசாங்கம் அல்லது கடற்றொழில் சார்ந்த நிறுவனங்கள் அல்லது ஆராய்ச்சி நிறுவனங்கள் சரியாக இலங்கையில் செயல்படவில்லை என்பதுவே ஆகும்.
இது இன்று வடக்கு கடற்றொழிலாளர்களிடையே பாதித்திருக்கின்றது. ஐந்து தொழிற்சாலைகளை மூடும் நிலைக்கு அரசாங்கமும் கடற்றொழில் சார் திணைக்களங்களும் தள்ளியுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சேரன் எடுத்த திடீர் முடிவால் கண்ணீரில் சோழன், பாண்டியன், பல்லவன், நிலா... அய்யனார் துணை சோகமான புரொமோ Cineulagam

வெளிநாடொன்றில் பிரபல இந்திய தம்பதி விபத்தில் பலி: பிள்ளைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி News Lankasri
