மூன்று மடங்கு அதிகரித்த ஜனாதிபதியின் செலவினத் தலைப்பு: அளிக்கப்பட்ட விளக்கம்
2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் ஜனாதிபதியின் செலவினத் தலைப்பு மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக வெளியான சில ஊடகச் செய்திகளை நிதி அமைச்சு மறுத்துள்ளது.
தொழில் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ இதுகுறித்து விளக்கமளிக்கையில்,
“ஊடகங்கள் ஒப்பிடுவதற்குப் பயன்படுத்திய புள்ளிவிவரங்கள் தவறானவை. 2025ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதியின் உண்மையான செலவு ஒதுக்கீடு ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது போல ரூ. 2.9 பில்லியன் அல்ல, மாறாக ரூ. 9 பில்லியன் ஆகும்.
ஜனாதிபதியின் செலவினம்
ரூ. 2.9 பில்லியன் என்பது ஆரம்ப வரைவில் (draft) இருந்த தொகை. ஆனால், 'க்ளீன் ஸ்ரீலங்கா திட்டம்' (Clean Sri Lanka Project) மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான (Research and Development) வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுடன் சேர்த்து உண்மையான ஒதுக்கீடு ரூ. 9 பில்லியன் ஆகும்.
2026ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதியின் மீண்டும் வரும் மற்றும் மூலதனச் செலவினங்களுக்காக ரூ. 11.37 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகையில் ஜனாதிபதி செயலக ஊழியர்களின் சம்பளம், 'க்ளீன் ஸ்ரீ லங்கா திட்டம்' மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான செலவுகள் ஆகியவை உள்ளடங்கும்.
இதன்படி, ஜனாதிபதியின் செலவினம் மூன்று மடங்கு அதிகரிக்கவில்லை என்றும், திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட மூலதனச் செலவுகளே அதிகரிப்புக்கு முக்கிய காரணம்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை News Lankasri

சேரன் எடுத்த திடீர் முடிவால் கண்ணீரில் சோழன், பாண்டியன், பல்லவன், நிலா... அய்யனார் துணை சோகமான புரொமோ Cineulagam

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri
