சம்பத் மனம்பேரியிடம் வசீம் தாஜுதீனின் மரணம் தொடர்பான புதிய விசாரணைகள்
சம்பத் மனம்பேரி, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் மரணம் குறித்து புதிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
ஐஸ் என்ற போதைப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு ரசாயனக் கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில், சம்பத் மனம்பேரி 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்படுகிறார்.
புதிய விசாரணைகள்
இந்த நிலையில், மனம்பேரியின் விசாரணைக்குப் பின்னர் திறக்கப்பட்ட வழிகளில் தாஜுதீனின் மரணம் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விசாரணைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன.
ஆதாரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. சம்பத் மனம்பேரி இப்போதுதான் தகவல்களை வெளியிடத் தொடங்கியுள்ளார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.