டெல் அவிவ் நகரில் திடீரென கூடிய மக்கள்.! வலுக்கும் இருதரப்பு அச்சம்
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரின் பணயக்கைதிகள் சதுக்கத்தில் ஏரளாமான மக்கள் திரண்டு காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இஸ்ரேலிய கொடிகள், பணயக்கைதிகளின் புகைப்படங்களை ஏந்தியிருந்த குறித்த கூட்டத்தினர், 'ட்ரம்ப் எங்களைக் காப்பாற்றுங்கள் - இப்போதே போரை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்' போன்ற வாசகங்களை எழுதிய பதாதைகளையும் கையில் வைத்திருந்தனர்.
இஸ்ரேலிய பணயக்கைதிகளை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வாருங்கள் என அவர்கள் கோஷமிட்டனர்.
இதேவேளை, இஸ்ரேல் காசாவில் குண்டுவீச்சு செய்வதை நிறுத்துமாறும் இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று இரவு ஒரு வலுவான அறிக்கையை வெளியிட்டார்.
விரைவில் அறிக்கை
இதனை மீறினால், ஹமாஸ் பேரழிவை சந்திக்கும் எனவும் ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.
Tel Aviv erupts in MASSIVE protest
— RT (@RT_com) October 4, 2025
Israelis want Netanyahu to sign Trump’s Gaza deal and END war
‘It’s now or NEVER’ pic.twitter.com/FQXijiaRc2
எனினும், அனைத்து பணயக்கைதிகளையும் விடுவித்தால் இஸ்ரேல் ஹமாஸ் மீது கொடூர தாக்குதல்களை நடத்தக்கூடும் என ஹமாஸ் அஞ்சுகின்றது.
மறுபுறம், காசாவில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையைக் குறைப்பது ஹமாஸுக்கு அதிக சக்தியை அளிக்கக்கூடும் என்று இஸ்ரேல் அஞ்சுவதாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில், இது தொடர்பில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விரைவில் ஒரு அறிக்கையை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை News Lankasri

கணவர் இறந்த பின்னரும் தாலியுடன் இருக்கும் பிரியங்கா- அவ்வளவு பிரியம்.. நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri

வெளிநாடொன்றில் பிரபல இந்திய தம்பதி விபத்தில் பலி: பிள்ளைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி News Lankasri
