கரூர் விவகாரத்தால் விஜய்க்கு பெரும் பின்னடைவு: குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 உயிரிழந்த சம்பவம் தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் பயணத்திற்கு பெரும் பின்னடைவினை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
கரூர் கூட்ட நெரிசலில் 41 உயிரிழந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.
இந்நிலையில், இன்று சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டில் அதிக அளவில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விஜய் வீட்டை கடந்து செல்லும் வாகனங்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், பல வாகனங்கள் விஜய் வீட்டை கடந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றது.
2ஆம் கட்டத்தலைவர்கள் தலைமறைவு
சம்பவம் நடந்த இரவு, கரூரிலிருந்து திருச்சி விமான நிலையம் ஊடாக சென்னை புறப்பட விஜய் தயாரானபோது, உயிரிழப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்காமல் சென்றிருந்தார்.
இந்நிலையில், நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சம்பவம் தொடர்பிலான மனு விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்றம் தமிழக வெற்றி கழகத்தினை கடுமையாக கண்டித்திருந்தது.
இந்த வழக்கில் 2 பேர் மாத்திரம் கைது செய்யப்பட்ட நிலையில், நீதிமன்றத்தின் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கும் தவெக அரசியலில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, தவெகவின் 2ஆம் கட்டத் தலைவர்களாக அறியப்பட்ட பலரும் தலைமறைவாகி இருக்கும் நிலையில், விஜய்யின் அடுத்தக்கட்ட அரசியல் நடவடிக்கை பின்னடைவை சந்தித்துள்ளதாக கூறப்படுகின்றது.
2ஆம் கட்டத் தலைவர்கள் சிக்கலில் உள்ள நிலையில், அறிக்கை மற்றும் காணொளி மூலமாக மட்டுமே விஜய் எதிர்வரும் நாட்களில் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கரூர் விவகாரத்தில் திமுகவுக்கு முதல் 2 நாட்கள் பின்னடைவு ஏற்பட்டாலும், அடுத்தடுத்து ஒவ்வொரு நாளாக விளக்கங்கள், வீடியோக்கள், நீதிமன்றத்தின் கண்டிப்பு உள்ளிட்டவை கை கொடுத்துள்ளதாக கூறுகின்றனர்.
இதன் காரணமாக விஜய்யின் அடுத்தக்கட்ட அரசியல் நடவடிக்கை குறித்து கேள்விகள் அதிகரித்துள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை News Lankasri

சேரன் எடுத்த திடீர் முடிவால் கண்ணீரில் சோழன், பாண்டியன், பல்லவன், நிலா... அய்யனார் துணை சோகமான புரொமோ Cineulagam
