அரசாங்க தொழிலுக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு
பெருந்தோட்டப் பகுதிகளில் 863 பாடசாலைகளுக்கு 2535 ஆசிரிய உதவியாளர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சின் முகாமைத்துவ சேவை திணைக்களத்தின் பணிப்பாளருடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர், நியமனத்தை வழங்குவதற்கான அனுமதியை வழங்க நிதியமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு நியமிக்கப்படுகின்ற ஆசிரிய உதவியாளர்கள், குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்னர் பட்டப்படிப்பை அல்லது ஆசிரிய கலாசாலை கற்கையை பூர்த்தி செய்ததும் நிரந்தர நியமனத்துக்கு உள்வாங்கப்படுவார்கள்.
ஆசிரிய உதவியாளர் நியமனம்
மேலும் இந்த காலப்பகுதியில் அவர்களுக்கு 20,000 ரூபாய் மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, மத்திய மாகாணத்தில் நிரந்தர நியமனம் கிடைக்கப்பெறாதுள்ள 125 ஆசிரிய உதவியாளர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் அந்த நியமனம் வழங்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் அரவிந்த்குமார் கூறியுள்ளார்.
இதற்கமைய, 2,531 பேருக்கான நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 12 மணி நேரம் முன்

Vijay Television Awards: அதிக விருதுகளை தட்டிதூக்கிய சீரியல் எது தெரியமா.. வென்றவர்களின் லிஸ்ட் இதோ Cineulagam

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri
