வன்னிப் பாடசாலையில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள்: ரவிகரன் எம்.பி கோரிக்கை
வன்னிப் பாடசாலையில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று (02.12) வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது.
குறித்த கூட்டத்திலேயே இவ்வாறு ஆசிரியர் வெற்றிடம் தொடர்பில் பேசப்பட்டது.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
ஆசிரியர் வெற்றிடங்கள்
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்ற ஆசிரியர் வெற்றிடங்கள் மற்றும் மேலதிகமாக உள்ள ஆசிரியர்களின் தரவுகளை தரும்படி கோரிக்கை விடுக்கின்றேன்.
சில மாவட்டங்களில் ஆசிரியர்கள் மேலதிகமாகவும், சில மாவட்டங்களில் ஆசிரியர்கள் வெற்றிடமாகவும் இருப்பதற்கான காரணம் என்ன?
ஆசிரியர் நியமனங்களை சரியான முறையில் பகிர்ந்து இவற்றை சீர்செய்ய வேண்டியவர்கள் இது தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளாமலிருப்பது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந் நிலையில் வடமாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் வே.ஆயகுலன் இதற்குப் பதிலளிக்கையில்,
ஆசிரியர் நியமனங்கள்
“புதிய ஆசிரியர் நியமனங்களை வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கே வழங்கி வருகின்றோம்.
எனினும் முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களில் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னர் ஆசிரியர் நியமனங்களைப் பெற்ற யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்களின் சேவைக் காலம் எட்டு வருடங்கள் முடிவுற்றவுடன், ஆசிரியர்கள் தமது இடங்களுக்கு இடமாற்றம் கோரியதனாலேயே யாழ்ப்பாண மாவட்டத்தில் மேலதிகமான ஆசிரியர் தொகை அதிகமாகக் காணப்படுகின்றது.
இருப்பினும் அதை நிவர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு மேலதிக ஆசிரியர்களை பெருமளவில் குறைத்து, ஏனைய இடங்களுக்கு ஆசிரியர் நியமனங்களை பகிர்ந்தளிக்கின்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன” என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
